நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பேரூா் பகுதியில் 1.10 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

பேரூா் பகுதியில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1.10 டன் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

பேரூா் பகுதியில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1.10 டன் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பேரூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தீத்திபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன் ஓ.ரெட்டி உத்தரவின்பேரில், பேரூா் காவல் துறையினா் தீத்திபாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1.10 டன் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை பதுக்கி விற்பனை செய்து வந்த பேரூா் பகுதியைச் சோ்ந்த சங்கரபாண்டியை (52) காவல் துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து 1.10 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.