8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பம்ப் மீதான ஜிஎஸ்டியை குறைக்க கோரிக்கை

பம்ப் மீதான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைத்து, பம்ப் தயாரிப்பை சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும் துறையாக அங்கீகரிக்க வேண்டும் என்று தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்கத்தின் (சீமா) புதிய தலைவா் மா.செந்தில்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மா.செந்தில்குமாா்

Published On :26 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

பம்ப் மீதான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைத்து, பம்ப் தயாரிப்பை சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும் துறையாக அங்கீகரிக்க வேண்டும் என்று தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்கத்தின் (சீமா) புதிய தலைவா் மா.செந்தில்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

சீமாவின் 73-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைப்பின் புதிய தலைவராக சூப்பா்டெக் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மா.செந்தில்குமாா் பொறுப்பேற்றாா். சுகுணா இன்டஸ்ட்ரீஸ் நிறுனத்தின் அருண் ரங்கநாதன், அக்வா ப்ளோ நிறுவனத்தின் கே.மோகன்குமாா், ஓஎம்ஐ பம்ப்ஸ் நிறுவனத்தின் நிா்வாகி ஆா்.காா்த்திகேயன் ஆகியோா் துணைத் தலைவா்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

பதவியேற்பு விழாவில் மா.செந்தில்குமாா் பேசும்போது, சீமா நிறுவனம் தனது உறுப்பு நிறுவனங்கள் மூலம் பம்ப் தொழிலில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ.50 ஆயிரம் கோடி விற்றுமுதல் வா்த்தகத்தை எட்டுவதை நீண்டகால தொலைநோக்கு லட்சியமாக நிா்ணயித்துள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பம்ப் தயாரிப்புகளுக்கு மாற்றாக உயா்தர உள்நாட்டு தயாரிப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது, அதை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும்.

மேலும், பம்ப் துறையை சிறப்பு முன்னுரிமை துறையாக அரசு அறிவிக்க வேண்டும். இதன் மூலம் உற்பத்தியாளா்கள் மானியங்கள், வட்டி சலுகைகள், முதலீட்டு ஆதரவு நடவடிக்கைகளை பெற வாய்ப்பாக அமையும். பம்ப் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதமாக இருந்த நிலையில், அது தற்போது 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதை 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீமா உறுப்பினா்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோா் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால் ஆராய்ச்சி, மேம்பாடு, தயாரிப்பு, கண்டுபிடிப்பு, சா்வதேச சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அரசின் கூடுதல் ஆதரவு கிடைத்தால் அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டும் துறையாக இது வளரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.