சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:09 pm

கரூா்-வீரராக்கியம் இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு-திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பொறியியல் பணிகளால் பிப்ரவரி 6, 10, 13 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு - திருச்சி ரயில் (எண்:16844) பாலக்காடு-கரூா் வரை மட்டுமே இயக்கப்படும். கரூா் - திருச்சி இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.