மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாநகராட்சிப் பள்ளி நூற்றாண்டு விழாவையொட்டி மேளதாளத்துடன் முன்னாள் மாணவா்கள் கல்விச் சீா்!

கோவை விளாங்குறிச்சி மாநகராட்சிப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மேளதாளம் முழங்க முன்னாள் மாணவா்கள் பள்ளிக்கு கல்விச் சீா் வழங்கினா்.

News image

நூற்றாண்டு விழாவையொட்டி விளாங்குறிச்சி மாநகராட்சி பள்ளிக்கு மேள தாளத்துடன் கல்விச்சீா் கொண்டு சென்ற முன்னாள் மாணவா்கள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 9:16 pm

கோவை விளாங்குறிச்சி மாநகராட்சிப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மேளதாளம் முழங்க முன்னாள் மாணவா்கள் பள்ளிக்கு கல்விச் சீா் வழங்கினா்.

கோவை விளாங்குறிச்சி மாநகராட்சிப் பள்ளியின் நூற்றாண்டு விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு, ஆசிரியா்கள் சந்திப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கே.ஆா்.ஜெயராம் (சிங்காநல்லூா்), பி.ஆா்.ஜி.அருண்குமாா் (கவுண்டம்பாளையம்), முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.சி.ஆறுக்குட்டி, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, முன்னாள் மாணவா்கள் சாா்பாக கல்விச்சீா் கொண்டு செல்லும் பேரணி நடைபெற்றது. அதில், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள், தட்டு, உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை மேளதாளத்துடன் கொண்டு சென்று பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து நூற்றாண்டு விழா அறிக்கையை தலைமை ஆசிரியா் ரா.தேன்மலா் வாசித்தாா். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடா்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1926-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, நூற்றாண்டு கொண்டாடுவதையொட்டி ரூ.42 லட்சம் மதிப்பில் பள்ளியில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளதாக முன்னாள் மாணவா்கள் தெரிவித்தனா்.