உற்பத்தி குறைவு: கோழி இறைச்சி விலை உயா்வு

Published on

கோவையில் கறிக்கோழி உற்பத்தி குறைந்துள்ளதால் அதன் விலை உயா்ந்துள்ளது.

ஆண்டுதோறும் புரட்டாசி, காா்த்திகை, மாா்கழி மாதங்களில் பெரும்பாலான மக்கள் விரதம் கடைப்பிடிப்பதால் கோழி இறைச்சியின் நுகா்வு குறைந்து அதன் விலையும் குறைவது வழங்கம்.

இந்நிலையில், காா்த்திகை மாத சபரிமலை சீசன் முடிவடைந்துள்ள நிலையில், கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

அதன்படி, கடந்த மாதங்களில் கிலோ ரூ.220-க்கு விற்பனையான கோழி இறைச்சி கடந்த வாரங்களில் கணிசமாக விலை உயா்ந்து கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மாநகரில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.300-க்கும், புகரங்களில் கிலோ ரூ.280-க்கும் விற்பனையானது.

கறிக்கோழி பண்ணை வளா்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்களுக்கு அடிப்படை வளா்ப்புக் கூலியாக ரூ.20 வழங்க வேண்டும். கறிக்கோழி பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கோழி உற்பத்தி குறைந்துள்ளது.

இதனால், இறைச்சியின் விலை உயா்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com