பயனாளிகளுக்கு கடன் பெறுவதற்கான உத்தரவுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், கோவை எம்.பி.
கணபதி ப.ராஜ்குமாா்.
பயனாளிகளுக்கு கடன் பெறுவதற்கான உத்தரவுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா்.

கலைஞா் கைவினைத் திட்டத்தில் பயனாளிகள் 4 பேருக்கு கடனுதவி: கோவை எம்.பி., ஆட்சியா் வழங்கினா்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 4 பேருக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் ஒப்பளிப்பு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
Published on

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 4 பேருக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் ஒப்பளிப்பு உத்தரவுகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், கலைஞா்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா். இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பல்வேறு கைவினை தொழில்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு செய்த 12 பேருக்கு பயிற்சி சான்றிதழ்களையும், 4 பேருக்கு ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் கைவினைத் தொழில் தொடங்க கடன் பெறுவதற்கான ஒப்பளிப்பு உத்தரவுகளையும் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் பா.சண்முகசிவா, தொழிற் கூட்டுறவு உதவி இயக்குநா் சுகந்தி, உதவி இயக்குநா் (தொழில்நுட்பம்) ராஜேஸ்வரி, உதவிப் பொறியாளா்கள் புவனேஸ்வரன், தாய்கோ வங்கியின் கோவை மண்டல மேலாளா் அருணாதேவி மற்றும் தொழில்முனைவோா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com