பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நபின் நாளை கோவை வருகை

Published on

பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக சனிக்கிழமை (ஜன.10) கோவைக்கு வரவுள்ளாா்.

கோவை நவ இந்தியாவில் உள்ள எஸ்என்ஆா் ஆடிட்டோரியத்தில் பாஜக தொழில் பிரிவு சாா்பில் வருகிற சனிக்கிழமை தொழில்முறை இணைப்பு- 2026 நிகழ்வு நடைபெறவுள்ளது. இதேபோல, வடவள்ளி பகுதியில் தொண்டாமுத்தூா் சாலையில் ‘நம்ம ஊரு மோடி’ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நபின், தில்லியிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு சனிக்கிழமை வருகிறாா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாஜக மாநில மையக்குழுக் கூட்டத்திலும் அவா் கலந்து கொண்டு கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். அப்போது, பாஜக தோ்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி, எல்.முருகன், முன்னாள் தலைவா்கள் கே.அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

Dinamani
www.dinamani.com