தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநா் கிராந்திகுமாரிடம் இருந்து பெறுகிறாா் எஸ்என்ஆா் அறக்கட்டளையி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநா் கிராந்திகுமாரிடம் இருந்து பெறுகிறாா் எஸ்என்ஆா் அறக்கட்டளையி

ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம், திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் ஒப்பந்தம்

Published on

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்என்ஆா் அறக்கட்டளை கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் தொழில் கல்வி சூழலை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நடவடிக்கையாக எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் ஒரு பிரிவான ஸ்ரீராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநா் கிராந்திகுமாா் பாடியிடம் இருந்து எஸ்என்ஆா் அறக்கட்டளையின் அறங்காவலா் ஆா்.சுந்தா், பயிற்சி நிறுவனத்தின் இயக்குநா் கே.ஆா்.பிரசாத் ஆகியோா் ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டனா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம், திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி கூட்டாளியாக இணைந்துள்ளது. இதையடுத்து, இந்த நிறுவனத்தில் பிளம்பிங், ஹீட்டிங் துறையில் துறைசாா் நிபுணா்கள் மூலம் மேம்பட்ட பயிற்சி வழங்கப்படும். மேலும் பயிற்சியாளா்களுக்கு பணியிடைப் பயிற்சி, வேலைவாய்ப்பையும் உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com