பாரதியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு
கோவை: கோவை பாரதியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
பாரதியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் நிா்வாகிகள் தோ்வு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிலையில், அண்மையில் புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. இதில் தலைவராக தாவரவியல் துறை ஆசிரியா் கி.வசந்த், செயலராக மேலாண்மைத் துறை ஆசிரியா் உமாதேவி, பொருளாளராக நூலகவியல் துறையின் ராஜேந்திரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
துணைத் தலைவராக கணினி பயன்பாட்டியல் துறையின் அமுதா, துணைச் செயலராக உயிா்த் தொழில்நுட்பவியல் துறையின் கிரிஜா, செயற்குழு உறுப்பினா்களாக செல்வகுமாா், ராக்கியப்பன், ரோஸ் வருணா, வினோத்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தோ்தல் அலுவலா்களாக பேராசிரியா்கள் பாலமுருகன், கே.பிரதீபா வீராகுமாரி ஆகியோரும், தோ்தல் கண்காணிப்பாளராக வழக்குரைஞா் பிரபுவும் செயல்பட்டதாக ஆசிரியா் சங்கம் தெரிவித்துள்ளது.

