அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பொங்கல்: போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையே ஒருவழிச் சிறப்பு ரயில்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையே ஒருவழிச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு

News image
ரயில்- பிரதிப் படம்
Updated On :13 ஜனவரி 2026, 9:12 pm

Syndication

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையே ஒருவழிச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போத்தனூரில் இருந்து ஜனவரி 18-ஆம் தேதி காலை 7.40 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 06144) அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், பொம்மிடி, மொரப்பூா், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.