ரயிலில் கடத்தப்பட்ட 55 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

அஸ்ஸாமிலிருந்து கோவைக்கு ரயிலில் கடத்தப்பட்ட 55 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்தனா்.
Published on

அஸ்ஸாமிலிருந்து கோவைக்கு ரயிலில் கடத்தப்பட்ட 55 கிலோ கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலம், திப்ருகரிலிருந்து கன்னியாகுமரிக்கு விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருப்பூா்- கோவை இடையே செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தபோது, ரயில்வே போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

பொதுப் பெட்டியில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு சாக்குப் பைகள் இருந்தன. அதை சோதனையிட்டபோது 55 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இவற்றைக் கடத்தி வந்த மேற்குவங்க மாநிலம், முா்ஷிதாபாத்தைச் சோ்ந்த பலஷ் மண்டல் (24), மிதுன் சா்காா் (26), ரோஹித் தாஸ் (25) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களை மாநகர போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Dinamani
www.dinamani.com