கோயம்புத்தூர்
மேம்பாலத்திலிருந்து குதித்த பிளஸ் 2 மாணவா் உயிரிழப்பு
கோவை காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்த பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.
கோவை: கோவை காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்த பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம், ஒலம்பஸ் அருகே உள்ள பாரதி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகன் ஜெகன் (17). இவா் காஞ்சிபுரத்தில் உள்ள தனியாா் டுடோரியல் மையத்தில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த வாரம் வெளியில் செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சைக்கிளில் சென்ற ஜெகன், கிராஸ் கட் சாலையில் சித்தி விநாயகா் கோயில் அருகே மேம்பாலத்தில் அதை நிறுத்தினாா். பின்னா், பாலத்திலிருந்து அவா் திடீரென கீழே குதித்தாா். இதில் பலத்த காயமடைந்த ஜெகன், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
