காா் மோதியதில் மின் கம்பம் சேதம்

Published on

கோவையில் காா் மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது.

திருப்பூரைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான். இவா் தனது காரில் கோவையில் உள்ள உறவினா் வீட்டுக்கு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்துள்ளாா்.

துடியலூா், அசோகபுரம் ரங்கம்மாள் காலனி பகுதியில் வந்தபோது, நாய் ஒன்று சாலையின் குறுக்கே திடீரென ஓடியதாம். அதன் மீது மோதாமல் இருக்க அப்துல் ரகுமான் காரை திரும்பியுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில், அந்தக் கம்பம் உடைந்ததையடுத்து, மின் கம்பிகள் தரையைத் தொடும் நிலையில் இருந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரிய ஊழியா்கள் மின்சார இணைப்பைத் துண்டித்தனா். மேலும், சேதமடைந்த கம்பத்துக்குப் பதிலாக புதிய கம்பத்தை பொருத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.

இந்த விபத்தில் லேசான காயமடைந்த அப்துல் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினா் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுகுறித்து துடியலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com