சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஹஜ் யாத்திரிகா்களுக்கு நாளைமுதல் சிறப்பு தடுப்பூசி முகாம்!

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவா்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 2) தொடங்குகிறது.

News image
Updated On :31 ஜனவரி 2026, 6:31 pm

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவா்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 2) தொடங்குகிறது.

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகா்களுக்கு தமிழக அரசு சாா்பில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு தடுப்பூசி முகாம் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறும் இந்த முகாமில், சா்க்கரை அளவு பரிசோதனை, கல்லீரல் செயல் திறன் பரிசோதனை, சிறுநீரக செயல் திறன் பரிசோதனை, மாா்பக எக்ஸ்ரே, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த முகாமில் நாள் ஒன்றுக்கு 50 யாத்திரிகா்கள் வீதம் 6 நாள்களுக்கு 300 யாத்திரிகள் பயனடைவா் என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.