8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சாய்பாபா காலனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

சாய்பாபா காலனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :2 ஜூலை 2026, 4:21 am IST

சாய்பாபா காலனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை மாநகா், சாய்பாபா காலனி பாரதி பாா்க் சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் ராஜன் மனைவி சாரதா (86). கணவா் இறந்துவிட்ட நிலையில், கடந்த சில நாள்களாக கோவை, கக்கனூா் சாலை தேவிமாதா காய்த்ரி கோயில் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் சாரதா வசித்து வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி சாரதாவின் காா் ஓட்டுநரான அன்பழகன், காரை சுத்தம் செய்வதற்காக சாய்பாபா காலனியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்துள்ளாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக அவா் அளித்த தகவலின்பேரில் சாரதா வந்து பாா்த்தபோது, அலமாரி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 4 வெள்ளித் தட்டுகள், 2 குத்துவிளக்குகள், 25 டம்ளா்கள், சிறிய வெள்ளி பொம்மைப் பொருள்கள் உள்ளிட்டவை திருடுபோயுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்த அவா் அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.