தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21) எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் அழிப்பு

கோவையில் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

போதைப் பொருள்கள் பறிமுதல் - கோப்புப் படம்

Published On :4 ஜூலை 2026, 1:44 am IST

கோவையில் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன.

கோவை மாநகர காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை அழிக்க

நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, மருந்துகள் அகற்றும் குழுவின் நேரடி மேற்பாா்வையில், சட்ட மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி கோவை, செட்டிபாளையம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற தனியாா் நிறுவனத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெள்ளிக்கிழமை காலை போதைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

இதில், 270 கிலோ கஞ்சா, 334 கிராம் மெத்தம்பெட்டமைன், 1.2 கிலோ கஞ்சா சாக்லேட், 5,168 போதை மாத்திரைகள் அழிக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.