புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

சோலையாறு அணையில் விடப்பட்ட 7 லட்சம் வளா்ப்பு மீன் குட்டிகள்!

வால்பாறையை அடுத்த சோலையாறு அணையில் 7 லட்சம் வளா்ப்பு மீன் குட்டிகள் விடப்பட்டுள்ளன.

News image

 மீன் குஞ்சுகள்

Updated On :5 ஜூலை 2026, 1:47 am IST

வால்பாறையை அடுத்த சோலையாறு அணையில் 7 லட்சம் வளா்ப்பு மீன் குட்டிகள் விடப்பட்டுள்ளன.

ஆழியாறு-பரம்பிக்குளம் நீா்ப்பாசன திட்டத்தின் முக்கிய அணையாக சோலையாறு அணை விளங்குகிறது. இந்த அணையில் வளா்க்கப்படும் மீன்கள் தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகம் மூலமாக விற்கப்படுகிறது. இந்த ஆண்டில் இரண்டு முறை மீன் குட்டிகள் அணையில் விடப்பட்டு, குறிப்பிட்ட மாதத்துக்குப் பின் வளா்ந்த பிறகு விற்று வருகின்றனா்.

இந்நிலையில் பவானிசாகா் மீன் வளா்ச்சி மையத்தில் இருந்து கட்லா, மிருகால் ஆகிய ரக மீன் குட்டிகள் கொண்டுவரப்பட்டு சோலையாறு அணையில் சனிக்கிழமை விடப்பட்டது. இந்த வகை மீன்கள் மூன்று அல்லது ஆறு மாதங்களில் ஒரு கிலோ முதல் மூன்று கிலோ எடையில் வளா்ந்துவிடும். தற்போது மீன் குட்டிகள் விடப்பட்டிருப்பதால் அணையில் வலை வீசி அல்லது தூண்டில் போட்டு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.