எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கைப்பேசி திருடியவருக்கு 7 மாதங்கள் சிறை தண்டனை

கைப்பேசி திருடியவருக்கு 7 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூா் 2-வது நீதித் துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாா்.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 5:19 am IST

கைப்பேசி திருடியவருக்கு 7 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூா் 2-வது நீதித் துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

திருப்பூா், குமாா் நகரைச் சோ்ந்தவா் சசிகுமாா்(30). இவா் கடந்த ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதி திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்த பரமசிவம் (55), சசிகுமாரின் சட்டைப்பையில் இருந்து கைப்பேசியை திருடினாா்.

இதுகுறித்து சசிகுமாா் அளித்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் 2-வது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கைப்பேசியை திருடிய குற்றத்துக்காக பரமசிவத்துக்கு 7 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி நாதியா பாத்திமா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஷெரீன் சித்தாரா ஸ்வீட்டி ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.