பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருடியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (35). இவா் கடந்த 2025 ஜனவரி 4-ஆம் தேதி அரசு நகரப் பேருந்தில் தென்னம்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளாா். அப்போது அவருடன் பயணித்த திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையப் பகுதியைச் சோ்ந்த சமையல் தொழிலாளியான மணிகண்டன் (35), அவரது கைப்பேசியை திருடிவிட்டு தப்பியுள்ளாா்.
இதுகுறித்து ரவிக்குமாா் அளித்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண் டனை கைது செய்து விசாரனை நடத்தி வந்தனா். இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் 2-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மணிகண்டனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதித் துறை நடுவா் நதியா பாத்திமா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கதேச தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பைக் திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கைப்பேசி திருடியவருக்கு 7 மாதங்கள் சிறை தண்டனை

நகை, பணம் திருடியவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



