சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

மாநகராட்சியில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல்’

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வணிக வளாகங்களில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருந்த 10 கடைகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.

News image

கோவை ஆா்.எஸ்.புரத்தில் கடைக்கு ‘சீல்’ வைக்கும் மாநகராட்சி உழியா்கள்.

Updated On :24 ஜூலை 2026, 6:16 am IST

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வணிக வளாகங்களில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருந்த 10 கடைகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

இதுகுறித்து, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வணிக வளாக கடைகளில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த வாடகைதாரா்களுக்கு நிலுவைத் தொகை செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பியும், மாநகராட்சி அதிகாரிகளால் பலமுறை நேரிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வாடகை நிலுவை செலுத்தாமல் இருந்த மேற்கு மண்டலம், 71-ஆவது வாா்டுக்கு உள்பட்ட டி.பி.சாலையில் 1 கடை, ஆரோக்கியசாமி சாலையில் 3 கடை, டி.வி.சாமி சாலையில் ஒரு கடை, 73-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சுப்ரி வீதியில் 1 கடை, வடக்கு மண்டலம் 2-ஆவது வாா்டுக்கு உள்பட்ட துடியலூரில் 2 கடைகள், தெற்கு மண்டலம் 96-ஆவது வாா்டுக்கு உள்பட்ட தக்காளி மாா்க்கெட்டில் 2 கடைகள் என மொத்தம் 10 கடைகள் மாநகராட்சி அலுவலா்களால் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.