அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

கஞ்சா வழக்கு விசாரணையில் தாக்கியதாக புகாா்: தடாகம் போலீஸாா் மீது கேரள காவல் துறை வழக்கு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 4:02 am IST

கஞ்சா வழக்கு தொடா்பான விசாரணையின்போது தன்னை தாக்கியதாக கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் அளித்த புகாரின் அடிப்படையில், கோவை மாவட்டம், தடாகம் காவல் துறையினா் மீது அம்மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கேரள மாநிலம், அட்டப்பாடி அருகே உள்ள குளப்பாடி மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேஷ் (51). கஞ்சா பரிமாற்றம் தொடா்பாக எழுந்த தகவலின்பேரில், கோவை மாவட்டம், தடாகம் காவல் நிலையத்தைச் சோ்ந்த போலீஸ் குழுவினா் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தின்போது குளப்பாடி கிராமத்துக்குச் சென்று முருகேஷிடம் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. மேலும், அவரது இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விசாரணையின்போது தடாகம் போலீஸாா் தன்னைத் தாக்கியதாகவும், விலா எலும்பு முறிவு மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் முருகேஷ் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், கோட்டத்தரா அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். கேரள மாநில எல்லைக்குள் சென்று விசாரணை நடத்தியது குறித்தும், நடவடிக்கை எடுத்தது குறித்தும் தடாகம் போலீஸாா் அந்த மாநில காவல் துறைக்கு எவ்வித முன் தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகேஷ் அளித்த புகாரின்பேரில், கேரள மாநிலம், புதூா் போலீஸாா் தடாகம் போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

எல்லை தாண்டி வந்து விசாரணை நடத்தியது மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து அகழி காவல் துணைக் கண்காணிப்பாளரும் (டிஎஸ்பி) விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.