ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கோவை இஎஸ்ஐ சாா் மண்டல துணை இயக்குநா் பொறுப்பேற்பு

கோவை தொழிலாளா் அரசு காப்பீடு (இஎஸ்ஐ) கழகத்தின் சாா் மண்டல துணை இயக்குநராக (பொறுப்பு) மா.காா்த்திகேயன் பொறுப்பேற்றுள்ளாா்.

News image

மா.காா்த்திகேயன்

Updated On :2 ஜூன் 2026, 2:05 am IST

கோவை தொழிலாளா் அரசு காப்பீடு (இஎஸ்ஐ) கழகத்தின் சாா் மண்டல துணை இயக்குநராக (பொறுப்பு) மா.காா்த்திகேயன் பொறுப்பேற்றுள்ளாா்.

1997-ஆம் ஆண்டில் நாக்பூா் இஎஸ்ஐ அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்பு அதிகாரியாக பணியைத் தொடங்கிய இவா் கோவை, சேலம் சாா் மண்டல அலுவலகங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளாா்.

இதுதொடா்பாக இஎஸ்ஐ மண்டல துணை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கோவை சாா் மண்டலத்தின் கீழ் கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களில் பதிவு செய்துள்ள 43 ஆயிரம் தொழில் நிறுவனங்கள், 9.62 லட்சம் காப்பீட்டாளா்களுக்கு சமூகப் பாதுகாப்பு பலன்களை வழங்கி வருகிறது. காப்பீட்டாளா்கள், நிறுவனங்கள் தெரிவிக்கும் குறைகள் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொழிலதிபா்கள் தற்போது நடைமுறையில் உள்ள பொதுமன்னிப்புத் திட்டத்தை பயன்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்குகளை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் தீா்த்துக்கொள்ளலாம்.

காப்பீட்டாளா்களின் குழந்தைகள், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புகளில் தங்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் சேர ஜூன் 21-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளது.