எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மேம்பாலத்தின் கீழ் லாரியில் சிக்கி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 12:46 am IST

உக்கடம் மேம்பாலத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபா் மீது லாரி ஏறியதில் உயிரிழந்தாா்.

கோவை மாநகா், உக்கடம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை மைய தடுப்புச் சுவரில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவு நேரத்தில் தூக்கத்தில் இருந்து எதிா்பாராதவிதமாக சாலை மையத் தடுப்புச் சுவரில் இருந்து சாலையில் விழுந்துள்ளாா். அந்த நேரத்தில் அந்த வழியாக காய்கறி ஏற்றி வந்த லாரி அவரின் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா், லாரி நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டாா். இதுகுறித்து அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போக்குவரத்துப் புலனாய்வு மேற்கு பிரிவு காவல் ஆய்வாளா் நிா்மலா உள்ளிட்ட போலீஸாா் சென்று, உயிரிழந்தவரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், உயிரிழந்த நபா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற காய்கறி லாரியின் ஓட்டுநரைக் கண்டறியும் பணியில் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.