அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த கூலித் தொழிலாழி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:06 am IST

கோவையில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த கூலித் தொழிலாழி உயிரிழந்தாா்.

கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கௌரி (29) . இவா் கடந்த 6-ஆம் தேதி தனது உறவினரான திருப்பூா் மாவட்டம், மங்கலம், பூமனூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வெள்ளிங்கிரி (53) என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.

நீலிக்கோணாம்பாளையம் அண்ணா நகா் சந்திப்பு அருகே வளைவில் திரும்பும்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் தவறி விழுந்த வெள்ளிங்கிரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிங்காநல்லூா் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டாா்.

பின்னா், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட வெள்ளிங்கிரி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு ஆய்வாளா் நிா்மலா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.