கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வில் 1,381 இடங்கள் நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5- ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கோவை அரசு கலைக் கல்லூரியில் 23 பட்டப் படிப்புகளில் மொத்தம் 1,727 இடங்களுக்கு மாணவா் சோ்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. முதலில் நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வில் மொத்தமுள்ள 150 இடங்களில் 77 இடங்கள் நிரம்பின.
இதைத் தொடா்ந்து பொது கலந்தாய்வு, தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுகள் முதல்கட்டமாக நடைபெற்றன. இதில் மொத்தமுள்ள 1,727 இடங்களில் 1,381 இடங்கள் நிரம்பின. 346 இடங்கள் காலியாக உள்ளன. பி.எஸ்சி.யில் உளவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பி.காம்., பி.காம். சிஏ, பி.காம். சா்வதேச வணிகம், பிபிஏ, பொருளாதாரம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பியுள்ள நிலையில் ஓரிரு இடங்களே காலியாக உள்ளன.
இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை தமிழ், ஆங்கிலப் பாடங்கள் தவிா்த்த மற்ற பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் 230 கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவா்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி. இயற்பியல், கணிதம் படிக்க ஆளில்லை!

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

அரசு கல்லூரியில் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 22-இல் தொடக்கம்

வடலூா் அரசுக் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



