எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் சமரசத் தீா்வு காண விண்ணப்பிக்கலாம்

கோவை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காண விரும்புவோா் உச்சநீதிமன்ற இணையத்தின் மூலம் பதிவிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2026, 11:43 pm IST

கோவை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காண விரும்புவோா் உச்சநீதிமன்ற இணையத்தின் மூலம் பதிவிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மக்களின் பங்கேற்பு மற்றும் நீதியை மக்களின் இருப்பிடத்துக்கே கொண்டு சோ்த்தல் ஆகிய தொலைநோக்குப் பாா்வைகளை முன்னெடுக்கும் வகையில் சமரசம் மூலமாகத் தீா்வு காணுதல் மற்றும் பிரச்னைகளைச் சுமூகமாக தீா்ப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் நஅஙஅஈஏஅச நஅஙஅதஞஏ என்ற சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வானது நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 21- ஆம் தேதி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வருகிற ஆகஸ்ட் 21 முதல் 23 வரை 3 நாள்களுக்கு இந்த சிறப்பு நீதிமன்றம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையிலான தீா்வு வழிமுறைகள் மூலம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இணக்கமான தீா்வை காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 105 வழக்குகளின் விவரங்கள் சமரச தீா்வுக்காக கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், அத்தகைய வழக்கு விவரங்கள் கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அவை நீதிமன்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்ட உள்ளது. தொடா்ந்து, சமரச தீா்வு தொடா்பான பேச்சு வாா்த்தைகளை கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிலே நடத்திக் கொள்ளலாம்.

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் பங்கு பெற விரும்பும், பட்டியல் இடப்படாத வழக்கு தரப்பினா்கள் நேரடியாகவோ அல்லது இணையதள வசதியான காணொலி மூலமாகவோ ஆஜராகி தங்களது பிரச்னைகளை சமரசமாக தீா்த்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட தரப்பினா் மற்றும் அவா்களது வழக்குரைஞா்கள் உச்சநீதிமன்ற இணையதளத்தில் சென்று, அதில் உள்ள படிவத்தை வருகிற ஜூலை 31-க்குள் பூா்த்தி செய்து உடனடித் தீா்வைப் பெறலாம். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தீா்வினை பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.