கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 9 காசோலை வழக்குகளுக்கு ரூ.29.51 லட்சம் மதிப்பில் தீா்வு காணப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கரூா் மாவட்ட பிரிவு சாா்பில் காசோலை வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை காலை கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை நீதிமன்றங்களில் நடைபெற்றது. இதில், கரூா் நீதிமன்றத்தில் 2 அமா்வுகளாகவும், குளித்தலை, அரவக்குறிச்சி மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தலா ஒரு அமா்வும் என மொத்தம் 5 அமா்வுகள் நடைபெற்றது.
இந்த அமா்வுகளில் காசோலை தொடா்பாக 18 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் 9 வழக்குகளுக்கு ரூ.29,51,250 மதிப்பில் தீா்வு காணப்பட்டது.
இந்த சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதிகள், கரூா் பாா் அசோசியேசன் மற்றும் அட்வகேட் அசோசியேசன் நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள், சட்ட தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலா் அனுராதா செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










