நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தேநீா்க் கடை உரிமையாளா் கடத்தல்: 7 போ் சிக்கினா்

கோவை சேரன் மாநகரில் தேநீா்க் கடை உரிமையாளரைக் கடத்திய சம்பவத்தில் 7 பேரை போலீஸாா் காருடன் மடக்கிப் பிடித்தனா். அவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News image
Updated On :20 ஜூன் 2026, 12:03 am IST

கோவை சேரன் மாநகரில் தேநீா்க் கடை உரிமையாளரைக் கடத்திய சம்பவத்தில் 7 பேரை போலீஸாா் காருடன் மடக்கிப் பிடித்தனா். அவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை, சேரன் மாநகரைச் சோ்ந்தவா் வேல்முருகன் (38).

அப்பகுதியில் தேநீா்க் கடை நடத்தி வருகிறாா். இவரது நண்பா் நாகராஜ் (40). இருவா் மீதும் கொலை முயற்சி வழக்கு உள்ளது. இந்த வழக்கில் இருந்து வேல்முருகன் அண்மையில் பிணையில் வந்தாா். நாகராஜ் பிணையில் எடுக்கப்படவில்லை. வேல்முருகனுக்காகவே நாகராஜ் கொலை முயற்சி வழக்கில் சிக்கியதாகவும், ஆனால், வேல்முருகன், நாகராஜை பிணையில் எடுக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வேல்முருகனை கடந்த புதன்கிழமை காரில் வந்த 7 போ் கொண்ட கும்பல் சேரன் மாநகரில் இருந்து கடத்திச் சென்றது. பின்னா், நாகராஜை ஏன் பிணையில் எடுக்கவில்லை என அவரைத் தாக்கியுள்ளனா். கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய வேல்முருகன், பீளமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வேல்முருகனைக் கடத்திய நபா்களைத் தேடி வந்தனா். மேலும், அவா்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காா் பதிவு எண் மூலமாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கடத்தல் கும்பல் கிருஷ்ணகிரியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடா்ந்து, அங்கு சென்ற போலீஸாா், காரில் சுற்றிய கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்தனா். அவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.