/

கஞ்சா, போதை மாத்திரை விற்பனை: 4 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 2:54 am IST

கோவையில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சிங்காநல்லூா் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரைப் பிடித்து சோதனை நடத்தினா். அவா் 4 கிலோ 200 கிராம் கஞ்சாவை சாக்குப் பையில் வைத்துக் கடத்தியது தெரியவந்தது.

விசாரணையில், அவா் பிகாா் மாநிலம், மதுபனி மாவட்டத்தைச் சோ்ந்த லால் பிகாரி யாதவ் மகன் உமேஷ் (26) என்பது தெரியவந்தது. கட்டடத் தொழிலாளியான இவா், பிகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, கோவையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, சிங்காநல்லூா் போலீஸாா் உமேஷைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் கஞ்சா விற்ற தேவாங்கா நகரைச் சோ்ந்த வெங்கடேஷ் (35) மற்றும் காந்தி பாா்க் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (22) ஆகிய இருவரை சாய்பாபா காலனி போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதி பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்தப் பகுதியில் தங்கி தொழிலாளியாக வேலை பாா்த்து வரும் நாகாலாந்து மாநிலத்தைச் சோ்ந்த கைமின்மாங் சிங்சன் (22) என்பவா் அரசால் தடைசெய்யப்பட்ட ‘பைவோன் ஸ்பாஸ் பிளஸ்’ என்ற போதை மாத்திரைகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, கைமின்மாங் சிங்சனை ரத்தினபுரி காவல் ஆய்வாளா் புஷ்பாராணி கைது செய்து, அவரிடமிருந்து 28 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.