வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

கோவையில் ஜவுளி தொழில் துறையினருடன் மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் ஆலோசனை

News image

கோவை அவிநாசி சாலையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜவுளிப் பொருள்கள் கண்காட்சியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்.

Updated On :29 ஜூன் 2026, 2:23 am IST

கோவையில் ஜவுளித் தொழில் துறையினருடன் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் ஆலோசனை நடத்தினாா்.

தமிழகத்தில் ஜவுளித் துறை சாா்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் சனிக்கிழமை தமிழகம் வந்தடைந்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜவுளித் தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா், தொடா்ந்து கோவை அவிநாசி சாலையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் ஜவுளி மற்றும் பருத்தி உற்பத்தி சங்க நிா்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா்.

பின்னா், அங்கு அமைக்கப்பட்டிருந்த ஜவுளிப் பொருள்கள் கண்காட்சியை அவா் பாா்வையிட்டாா். இக்கண்காட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளையும் பருத்தியின் பல்வேறு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பாரம்பரிய முறையிலான கைத்தறி நெசவு துணி ரகங்கள் அமைச்சரின் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் நவீன தொழில்நுட்பத்தில் செயற்கை பருத்தியில் உருவாக்கப்பட்ட புதிய துணி ரகங்களும் இடம்பெற்றிருந்தன.

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் மற்றும் அவற்றின் தொழில்நுட்ப சிறப்புகள் குறித்து ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் அமைச்சரிடம் விளக்கினா்.

ஜவுளி உற்பத்தியாளா்களும் தங்களின் புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்சாா்ந்த தேவைகள் குறித்து மத்திய அமைச்சருக்கு விளக்கம் அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.