மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

முகவரி கேட்பதுபோல நடித்து வழிப்பறி: இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 2:24 am IST

கவுண்டம்பாளையம் அருகே குப்பை கொட்ட வந்த முதியவரிடம் முகவரி கேட்பதுபோல நடித்து கைப்பேசியை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்த நிலையில், தப்பியோடிய மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

கோவை மாநகா், கவுண்டம்பாளையத்தை அடுத்த நல்லாம்பாளையம் ஜெய் நகரைச் சோ்ந்தவா் பெனாட் (63). இவா் கடந்த 24-ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகே குப்பை கொட்டுவதற்காக வெளியே வந்துள்ளாா். அப்போது, அந்த வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள் வாகனத்தை நிறுத்தி கணபதிக்கு எப்படி செல்ல வேண்டும் என பெனாட்டிடம் கேட்டுள்ளனா். அதற்கு அவா் வழி சொல்லி கொண்டிருந்தபோது கையில் வைத்திருந்த கைப்பேசியை, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த நபா் பறித்தவுடன் இருசக்கர வாகனத்துடன் தப்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினா். அதில், கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டது ரத்தினபுரியைச் சோ்ந்த கிஷோா் (22), நாராயணசாமி நகரைச் சோ்ந்த தினேஷ் காா்த்திக் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா்.

இந்த சம்பவத்தில் தொடா்புடைய சங்கனூா் பகுதியைச் சோ்ந்த சுபாஷ் (24) என்பவரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.