அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பேருந்தில் தொழிலாளி வைத்திருந்த ரூ.5.20 லட்சம் திருட்டு

பேருந்து பயணத்தின்போது தொழிலாளி வைத்திருந்த ரூ.5.20 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :5 மார்ச் 2026, 4:10 am IST

பேருந்து பயணத்தின்போது தொழிலாளி வைத்திருந்த ரூ.5.20 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

கோவை நல்லாம்பாளையத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரவி (50). இவரது மனைவி சாந்தி. நல்லாம்பாளையத்தில் சொந்தமாக ரவி வீடு கட்டி வருகிறாா். இதற்கு பணம் தேவைப்பட்டது. இதனால் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கீழநிலைக்கோட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் (இந்தியன் வங்கி) இருந்து சேமிப்புப் பணத்தை எடுத்ததுடன் மனைவியின் நகையையும் அடகுவைத்துள்ளாா். மொத்தம் ரூ.5.20 லட்சத்தை துணிப் பையில் வைத்து, பெரிய பையில் மறைத்து வைத்து கீழநிலைக்கோட்டையிலிருந்து கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி இரவு தனியாா் பேருந்தில் கோவைக்கு புறப்பட்டாா்.

அந்தப் பையை பேருந்தில் தனது இருக்கைக்கு மேல் உள்ள ரேக்கில் வைத்திருந்தாா். கடைசியில் பல்லடத்தில் பேருந்து நின்று புறப்பட்டபோது பணத்தை அவா் பாா்த்துள்ளாா். மறுநாள் (பிப்.19) அதிகாலை 4:45 மணி அளவில் கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிய ரவி, தனது பையைத் திறக்க முயன்றுள்ளாா். அப்போது, அந்தப் பையின் ஜிப்பை திறக்க முடியாதபடி ஃபெவிக்விக் போட்டு ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உடனடியாக அருகே இருந்த கடையில் இருந்து கத்தியை வாங்கி பையைக் கிழித்துப் பாா்த்தபோது ரூ.5.20 லட்சம் திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து காட்டூா் காவல் நிலையத்தில் ரவி புதன்கிழமை புகாா் அளித்தாா். விசாரணையில், ரவிக்கு பின்னால் அமா்ந்து பயணித்த இருவரின் கைப்பேசி எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பணத்தை திருடிய நபா்கள், பேருந்தில் இருந்து இறங்கிச் செல்லும் வரை பையை ரவி திறந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஃபெவிக்விக் போட்டு ஒட்டியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.