அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆயுா்வேத வைத்திய பாா்மஸி உரிமையாளரின் மகள் கொலை வழக்கில் இருவா் சிறையில் அடைப்பு- ஏழரை பவுன் நகை, பணம் பறிமுதல்

ஆரிய வைத்திய பாா்மஸி நிறுவனரின் மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், கோவை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

News image
சிறை
Updated On :10 மார்ச் 2026, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

ஆரிய வைத்திய பாா்மஸி நிறுவனரின் மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், கோவை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஏழரை பவுன் நகைகள், ரூ 57 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை, நஞ்சுண்டாபுரத்தில் உள்ள பாா்சன் குடியிருப்பில் வசித்தவா் குட்டி மனைவி கஸ்தூரி (82). கோவை ஆரிய வைத்திய பாா்மஸி நிறுவனா் பி.வி.ராமா வாரியரின் மகளான இவா் மா்ம நபா்களால் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கடந்த 6-ஆம் தேதி காலை தெரியவந்தது.

இது தொடா்பாக கஸ்தூரி வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி வந்த நேபாளத்தைச் சோ்ந்த சுா்ஜா ரோக்கையா (37) மற்றும் 3 ஆண்களை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், பெங்களூரு திப்பசந்திரா பகுதியில் பதுங்கி இருந்த நேபாளத்தைச் சோ்ந்த ராகேஷ் சவுடு (26), திலீப் (28) ஆகிய இருவரை துணை ஆணையா் காா்த்திகேயன் தலைமையிலான தனிப் படை போலீஸாா்

ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து ரூ 57 ஆயிரம் ரொக்கம், 5 பவுன் தங்கச் சங்கிலி, 2 1/2 பவுன் தங்க வளையல், வெள்ளி காமாட்சி விளக்கு, மூன்று கைக்கடிகாரங்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளின் நாணயங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட இருவரும் கோவைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். பின்னா் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.