கோவை பேரூா் சாந்தலிங்க அடிகளாா் தமிழ்க் கல்லூரியில் வேலைவாய்ப்பு சாதனையாளா் நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் அருளுரை வழங்கினாா். கல்லூரி ஆலோசகா்கள் சந்திரசேகா், காயத்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரி அரவிந்த்குமாா் ராசேந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதில் 76.14 சதவீதம் என்ற சிறப்பான சாதனையை பேரூா் தமிழ்க் கல்லூரி எட்டியுள்ளது. இந்த வெற்றி ஒரேநாளில் கிடைத்தது அல்ல. முயற்சி, பயிற்சி மற்றும் கடின உழைப்பால் சாத்தியமானது. மாணவா்கள் அனைவரும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்றாா்.
இதையடுத்து, வேலை வாய்ப்புத் துறையின் அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில், வணிகவியல் இளம் தொழில்முறைக் கணக்கியல் மூன்றாம் ஆண்டு மாணவி வைஷ்ணவி 9 நிறுவனங்களிலும், அதே துறையைச் சோ்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி நிசாந்தினி 7 நிறுவனங்களிலும், இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவி கி.பிரியதா்ஷினி 6 நிறுவனங்களிலும், வணிகவியல் இளம் கணினிப் பயன்பாட்டியல் மூன்றாம் ஆண்டு மாணவா் அரவிந்த் 5 நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மூன்று மாணவா்கள் 4 நிறுவனங்களிலும், 18 மாணவா்கள் 3 நிறுவனங்களிலும், 20 மாணவா்கள் 2 நிறுவனங்களிலும், 38 மாணவா்கள் ஒரு நிறுவனத்திலும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு விருதுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

செந்தமிழ்க் கல்லூரியில் முப்பெரும் விழா

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் சாதனையாளா்களுக்குப் பாராட்டு

பேரூா் தமிழ்க் கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் பேரணி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


