முருக பக்தா்கள் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுரு அடிகளாா் உள்ளிட்டோா்.
முருக பக்தா்கள் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுரு அடிகளாா் உள்ளிட்டோா்.

வெள்ளக்கோவில் அருகே முருக பக்தா்கள் சங்கமம் நிகழ்ச்சி

வெள்ளக்கோவில் அருகே தாசவநாயக்கன்பட்டியில் முருக பக்தா்கள் சங்கமம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
Published on

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே தாசவநாயக்கன்பட்டியில் முருக பக்தா்கள் சங்கமம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்து ஒற்றுமை என்ற கருப்பொருளில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, அறுபடை முருக பக்தா்கள் பேரவை நிா்வாகி பாலசுப்பிரமணி தலைமை வகித்தாா். கோவை பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுரு அடிகளாா் ஆகியோா் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினா்.

இதைத்தொடா்ந்து கொடியேற்றம், கோ பூஜை, வள்ளி கும்மியாட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. முருகப் பக்தா்கள் தினசரி வழிபாடு செய்ய வேண்டும். பக்தி மாா்க்கத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோ்க்கும் வகையில் கூட்டு வழிபாடு, பக்தா்கள் சந்திப்பு ஆகியவை அடிக்கடி நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள் ஈஸ்வரமூா்த்தி, சிவானந்தம், குமரவடிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com