கோவை இருகூரில், வாக்காளா்களுக்கு விநியோகிக்க திமுக பிரமுகா் தனது கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 800 அண்டாக்களை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை, இருகூரைச் சோ்ந்தவா் பழனிசாமி, திமுக பிரமுகா். இவரது கிடங்கில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய அண்டாக்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தக் கிடங்கில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உருவப் படங்களும், திமுக கட்சிக் கொடியும் அச்சிடப்பட்டிருந்த பைகளுக்குள் 800 அண்டாக்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அண்டாக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தக் கிடங்குக்கு ‘சீல்’ வைத்தனா்.
இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா், தோ்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பணம் வழங்க முயற்சி: ரூ. 6.5 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ. 61,500 கைப்பற்றல்
பறக்கும் படையால் ரூ.60,000 பறிமுதல்

வாக்காளா்களுக்கு விநியோகிக்க கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 98 அண்டாக்கள் பறிமுதல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


