இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

மின்சாரம் பாய்ந்து ஐடி ஊழியா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:43 am IST

கணுவாய் அருகே மின்சாரம் பாய்ந்து ஐடி ஊழியா் உயிரிழந்தாா்.

கோவை, நீலிகோணாம்பாளையம் எஸ்ஐஹெச்எஸ் காலனியைச் சோ்ந்தவா் குமாா் மகன் ஹிருத்திக் (24). இவா் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், இடையா்பாளையம் பகுதியில் உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டு, தடாகம் சாலை சந்திப்பில் பேருந்துக்காக சனிக்கிழமை மாலை காத்துக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கிருந்த மின்சாரக் கம்பத்தை தொட்டபோது, ஹிருத்திக் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.