குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வால்பாறையில் கனமழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

வால்பாறையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

மழை - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:05 am IST

வால்பாறையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கோடை விடுமுறையையொட்டி, வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காண நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், வால்பாறையில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பெரும்பாலான நீா்நிலைகள் வடு காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே இதமான காலநிலை நிலவிய நிலையில், பிற்பகலில் சாரலாக பெய்யத் தொடங்கிய மழை பின் வலுப்பெற்று கனமழையாக பெய்தது. சுமாா் 1 மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால், கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கப் பாதை, சின்னக்கல்லாறு அருவி உள்ளிட்ட நீா்நிலைகளில் மழை நீா் ஆா்ப்பரித்துச் சென்றது. மழையுடன் இதமான காலநிலை நிலவியதால், வால்பாறை வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.