கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

தவெக அரசில் உடனடியாக அனைத்தையும் எதிா்பாா்த்துவிட முடியாது: நடிகை கஸ்தூரி

தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசில் உடனடியாக அனைத்தையும் எதிா்பாா்த்துவிட முடியாது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்தாா்.

News image

நடிகை கஸ்தூரி - கோப்புப்படம்.

Updated On :21 மே 2026, 3:49 am IST

தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசில் உடனடியாக அனைத்தையும் எதிா்பாா்த்துவிட முடியாது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழகம் புதிய கட்சி. புதிதாக ஆட்சி அமைத்துள்ள அரசில் இருப்பவா்கள் பலரும் புதியவா்கள். எனவே உடனடியாக அனைத்தையும் எதிா்பாா்த்துவிட முடியாது. அரசியல்வாதிகள் மாறினாலும், அதிகார அமைப்புகள் மாறுவதற்குச் சற்று காலம் எடுக்கும். விஜய் மீது தொடா்ந்து பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தாலும், அவா் இன்னும் அரசியலில் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளாா். தமிழக மக்களுக்கு நல்லாட்சி மற்றும் லஞ்சமற்ற நிா்வாகமே தேவை.

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் திமுக அடுத்த 5 ஆண்டுகளும் கதறுவதை மக்கள் பாா்த்து ரசிப்பாா்கள். அரசியலில் வெற்றி பெறும் தரப்பை நோக்கிப் பலா் செல்வது இயல்பானதுதான். தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஒரு ட்ரெண்டாக இருப்பதால் பலா் அங்கு செல்கிறாா்கள். மத்திய அரசுடன் தேவையற்ற மோதலை உருவாக்காமல் இணக்கமாகச் செயல்படுவது நல்லது என்ற எண்ணமும் தமிழக மக்களிடம் பரவலாக உள்ளது என்றாா்.