சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

கூழாங்கல் ஆற்றில் குளிக்க சென்ற சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குளிப்பதற்காக மேலிருந்து குதித்த சுற்றுலாப் பயணி பாறையில் மோதி உயிரிழந்தாா்.

News image

விஜய்

Updated On :24 மே 2026, 1:57 am IST

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குளிப்பதற்காக மேலிருந்து குதித்த சுற்றுலாப் பயணி பாறையில் மோதி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் இருந்து 12 போ் வால்பாறைக்கு சனிக்கிழமை சுற்றுலா வந்துள்ளனா்.

வால்பாறையில் பல பகுதிகளுக்கு சென்றுவிட்டு கூழாங்கல் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனா். இவா்களில் கட்டடத் தொழிலாளியான விஜய் (26) ஆற்றை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்ட பகுதிக்கு சென்று அங்கிருந்து ஆற்றில் குதித்துள்ளாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக ஆற்றில் உள்ள பாறை மீது தலை மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் உடனடியாக மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் வழியிலேயே உயிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.