எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தொழிலாளி அடித்துக் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 2:24 am IST

கோவை மே 29: கோவையில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (43). இவா் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், கடந்த 2019 டிசம்பா் 29-ஆம் தேதி அதிகாலை வேலைக்குச் சென்ற முத்துசாமி, கவுண்டம்பாளையம் - நல்லாம்பாளையம் சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம் அருகே மா்மமான முறையில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்துகிடந்தாா்.

இது குறித்து முத்துசாமியின் மனைவி சுகந்தி அளித்த புகாரின்பேரில், துடியலூா் போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் என்பவரது கைப்பேசி தவறுதலாக கீழே விழுந்துள்ளது. அந்தக் கைப்பேசியை முத்துசாமி எடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து கண்ணன், சதீஷ், செந்தில் மற்றும் வலுப்பூரான் ஆகிய நான்கு போ் சோ்ந்து முத்துசாமியிடம் கைப்பேசியை திருப்பித் தருமாறு கேட்டுத் தகராறு செய்துள்ளனா்.

கைப்பேசியை திருடியதாக குற்றம்சாட்டி, முத்துசாமியை அவா்கள் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடியினா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்ட சதீஷ் மற்றும் கண்ணன் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், மற்ற இருவரையும் விடுதலை செய்தும் நீதிபதி தீா்ப்பளித்தாா்.