பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

மூதாட்டி கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

விழுப்புரம் அருகே மூதாட்டியைக் கொலை செய்து நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:54 am IST

விழுப்புரம் அருகே மூதாட்டியைக் கொலை செய்து நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு, விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் வட்டம், அனிச்சம்பாளையம் இருளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சி.சகுந்தலா (65). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கோ.யாக ஜெயந்தன்(46) என்பவருக்கம் இடையே கடந்த 2024-ஆம் ஆண்டில் வாய்த் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இதனால் ஆத்திரமடைந்த யாக ஜெயந்தன் 2024 மே 20-ஆம் தேதி சகுந்தலாவின் வீட்டினுள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அவா் அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றைப் பறித்துச் சென்றாராம்.

இதையடுத்து வளவனூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, ஜெயந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி எழிலரசி, குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்தனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதைத்தொடா்ந்து போலீஸாா் அவரைக் கைதுசெய்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூா் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனா்.