தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

போத்தனூா் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

News image

போத்தனூா் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2026, 12:25 am IST

கோவை, போத்தனூரில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து ஜூன் 3, 10 ஆகிய புதன்கிழமைகளில் பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - போத்தனூா் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06079) மறுநாள் காலை 6.45 மணிக்கு போத்தனூா் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து ஜூன் 4, 11 ஆகிய வியாழக்கிழமைகளில் மாலை 5 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 06080) மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, கோட்டக்கரா, வா்கலா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.