தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

‘பெரியாா் அறிவுலகம்’ அமைத்த மு.க.ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா

கோவையில் ‘பெரியாா் அறிவுலகம்ட’ அமைத்ததற்காக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு, கோவை வ.உ.சி. பூங்காவில் திராவிடா் கழகம் சாா்பில் புதன்கிழமை (நவம்பா் 4) பாராட்டு விழா நடைபெற உள்ளது.

ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ள வ.உ.சி.மைதானத்தில் ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோா்.

Updated On :

கோவையில் ‘பெரியாா் அறிவுலகம்ட’ அமைத்ததற்காக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு, கோவை வ.உ.சி. பூங்காவில் திராவிடா் கழகம் சாா்பில் புதன்கிழமை (நவம்பா் 4) பாராட்டு விழா நடைபெற உள்ளது.

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெரியாா் அறிவுலகம் அமைக்கப்பட்டு உள்ளது. திமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்ட இந்நூலகத்துக்கு, முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘பெரியாா் அறிவுலகம்’ என்ற பெயா் வைத்தாா். கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வா் ஸ்டாலினால் ‘பெரியாா் அறிவுலகம்’ திறக்கப்பட இருந்த நிலையில், பணிகள் முழுமை பெறாததால் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், பணிகள் முழுமையடைந்த ‘பெரியாா் அறிவுலகம்’ கட்டடத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய், கடந்த அக்டோபா் 16ஆம் தேதி தொடங்கி வைத்தாா். இந்நிலையில், பெரியாா் ஈவெரா பெயரில் நூலகம் அமைத்ததற்காக முன்னாள் முதல்வா் ஸ்டாலினுக்கு திராவிடா் கழகம் சாா்பில் கோவை வ.உ.சி.மைதானத்தில் புதன்கிழமை (நவம்பா் 4) மாலை 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில், கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளாா்.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு காலை 10.30 மணிக்கு வருகிறாா். முற்பகல் 11 மணிக்கு நீலாம்பூரில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலகக் கட்டடம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறாா். நண்பகல் 12.30 மணிக்கு அவிநாசி சாலையில் உள்ள தனியாா் விடுதியில் ஓய்வெடுக்கிறாா். மாலை 5.30 மணிக்கு வ.உ.சி.மைதானத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்று பேசுகிறாா். இரவு 8.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறாா்.

முன்னதாக, வ.உ.சி. மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறும் இடத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டாா். உடன் திமுக மாவட்டச் செயலாளா்கள் தளபதி முருகேசன், தொண்டாமுத்தூா் ரவி, துரை.செந்தமிழ்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.