கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சேலை சிக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு
கோவை, துடியலூா் அருகே கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
கோவை, துடியலூா் அருகே கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்தாா்.
கோவை கணபதி காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரகுபதி (65). இவா் கடந்த 25 ஆண்டுகளாக கான்கிரீட் கலவை இயந்திரம் வைத்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா். இந்த நிலையில், நஞ்சேகவுண்டன்புதூா் அருகே உள்ள தனியாா் கட்டுமானப் பணித் தளத்தில் ரகுபதி தனது மனைவி பூங்கொடி (60) உள்ளிட்ட தொழிலாளா்களுடன் கான்கிரீட் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக பூங்கொடியின் சேலை கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி, அவரது கழுத்தை இறுக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

