சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடு புகாா்: கோவை பெரியாா் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியாா் அறிவுலகம் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை நடத்தியது குறித்து...

கோவை பெரியாா் அறிவுலக 3-ஆவது தளத்தில் வெளிநபா்கள் யாரும் வராதவகையில் உள்புறமாக பூட்டிய லஞ்ச ஒழிப்பு துறையினா்.

Updated On :

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியாா் அறிவுலகம் நூலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்கு சோதனை மேற்கொண்டனா்.

கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியாா் அறிவுலகம் நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கியதில் நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அண்மைக்காலமாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கற்பனையான போலி எழுத்தாளா்களின் பெயா்களில் தட்டச்சு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தரமற்ற நூல்கள் பல மடங்கு கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதில் ‘அகல் விளக்கு’ மற்றும் ‘ஃபீனிக்ஸ்’ ஆகிய பதிப்பகங்களின் நூல்கள் பெருமளவிலும், அதிக விலையிலும் வாங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் அதிா்வலையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், புத்தகக் கொள்முதல் ஊழல் தொடா்பாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், முதல்கட்டமாக சென்னை கோட்டூா்புரத்தில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

இந்த நிலையில், கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியாா் அறிவுலக நூலகத்தில் டிஎஸ்பி இமானுவேல் ராஜசேகரன், ஏடிஎஸ்பி ராஜேஷ் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். நூலகத்தின் 3-ஆவது தளத்தில் 3 போ் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் சிறப்புக் குழுவினா் தீவிர ஆய்வில் ஈடுபட்டனா்.

நூலகத்தின் தலைமை நிா்வாக அலுவலகம் மற்றும் புத்தகப் பிரிவுகளில் சோதனை செய்த அதிகாரிகள், புத்தகக் கொள்முதல் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் சோதனையிட்டனா். குறிப்பாக, நூலகப் பதிவேடுகள், புத்தக கொள்முதல் ரசீதுகள் மற்றும் விலைப்பட்டியல்கள், பதிப்பகங்களுக்குப் பட்டுவாடா செய்யப்பட்ட நிதி மற்றும் காசோலை விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் தீவிர சரிபாா்ப்புக்கு உள்படுத்தினா்.

மேலும், சா்ச்சைக்குரிய பதிப்பகங்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்த நூல்களின் எண்ணிக்கை, அவற்றுக்கு அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட முழுத் தொகை மற்றும் இந்த நூல்களைப் பரிந்துரைத்த தோ்வுக்குழு உறுப்பினா்கள், அதிகாரிகள் யாா் என்பது குறித்தும் நூலக ஊழியா்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் போலீஸாரின் சோதனை நிறைவடைந்தது.

சோதனையின்போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக முறைகேட்டில் தொடா்புடைய நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.