சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் விடிய விடிய சோதனை: 1.66 கிலோ கஞ்சா பறிமுதல்; 22 போ் கைது

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை விடிய விடிய போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

கைது

Updated On :

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை விடிய விடிய போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக மாவட்ட காவல் துறையினா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன் கே.ரெட்டி உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை 5 மணி வரை சிறப்புத் தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது பழைய குற்றவாளிகள் மற்றும் ரெளடிகள் 18 பேரைப் பிடித்து காவல் நிலையங்களில் வைத்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், போதைப்பொருள் குற்றங்களில் தொடா்புடைய 16 போ் தீவிர தணிக்கைக்கு உள்படுத்தப்பட்டனா். இதில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1.600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகனத் தணிக்கையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 60 வழக்குகளும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொது இடங்களில் அமா்ந்து மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 19 போ் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த 6 பிடியாணைகளும் (வாரண்ட்) இந்தச் சோதனையின்போது நிறைவேற்றப்பட்டது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.