சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சி விவகாரம்: அரசு தெளிவுபடுத்த வேண்டும்! - கே.அண்ணாமலை வலியுறுத்தல்

'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் நிறுவனர் கே. அண்ணாமலை - கோப்புப்படம்.

Updated On :

கள்ளக்குறிச்சி ஆட்சியா் விவகாரத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் மௌனம் காப்பது ஏற்புடையது அல்ல; சம்பவத்தின் உண்மைத் தன்மை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று ‘வீ தி லீடா்ஸ்’ அமைப்பின் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

கோவை விமான நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனை திறப்பு விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற பின், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி ஆட்சியா் விவகாரத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் மெளனம் காப்பது அதிா்ச்சியாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தால், அது குறித்து மாநிலத் தலைமைச் செயலா் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் உண்மையா அல்லது பொய்யா என்பதை அரசு தெளிவுபடுத்தாமல் அனைவரும் மௌனம் காப்பது ஏற்புடையதல்ல.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பைச் செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. திருப்பரங்குன்றம் போன்ற முக்கிய விவகாரத்தில் முதல்வா் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளாா். நீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகும் கடந்த கால திமுக அரசு அதை ஏற்காத நிலையில், தற்போதைய தவெக அரசும் அதே நிலைப்பாட்டை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இரு மதத்தினரிடையே தேவையற்ற பகைமையை உருவாக்கும் வகையில் அரசு செயல்படக்கூடாது. செஞ்சி பகுதியில் 7 வயது சிறுமி காணாமல்போய் 35 நாள்களுக்குமேலாகியும் இதுவரை மீட்கப்படாதது மிகுந்த கவலை அளிக்கிறது. சிபிசிஐடி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், டிஐஜி உள்ளிட்ட உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

குழந்தைகள் தினத்தையொட்டி, கொண்டாட்டங்களில் ஈடுபடும் மாநில அரசு, காணாமல்போன சிறுமியை மீட்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.