பெரியாா் அறிவுலக நூலக முறைகேடு புகாா்: 20 புத்தகங்களை ஆய்வுக்கு அனுப்பிய லஞ்ச ஒழிப்புத் துறையினா்

கோவை பெரியாா் அறிவுலக புத்தகக் கொள்முதல் முறைகேடு புகாரை அடுத்து நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில், பறிமுதல் செய்யப்பட்ட 20 புத்தகங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினா் ஆய்வுக்கு அனுப்பிவைத்தனா்.

Periyar Arivulagam

பெரியாா் அறிவுலகம் - கோப்புப்படம்

Updated On :

கோவை பெரியாா் அறிவுலக புத்தகக் கொள்முதல் முறைகேடு புகாரை அடுத்து நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில், பறிமுதல் செய்யப்பட்ட 20 புத்தகங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினா் ஆய்வுக்கு அனுப்பிவைத்தனா்.

கோவை, காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரியாா் அறிவுலகத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி திறந்துவைத்தாா்.

இந்நிலையில், நூலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பெருமளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பிரபல எழுத்தாளா் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டினாா். ‘அகல் விளக்கு, பீனிக்ஸ்’ ஆகிய பதிப்பகங்களிடமிருந்து பல லட்சம் ரூபாய்க்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தையில் வழக்கமாக ரூ.300-க்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு சுமாா் ரூ.1,400 வரை விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாகவும் அவா் சுட்டிக்காட்டியிருந்தாா்.

தமிழக அரசியல் மற்றும் இலக்கிய வட்டாரத்தில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தைத் தொடா்ந்து, சா்ச்சைக்குரிய ‘அகல் விளக்கு, பீனிக்ஸ்’ பதிப்பகங்களின் புத்தகங்கள் நூலகத்தில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டன.

மேலும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகளும், எழுத்தாளா்களும் வலியுறுத்தினா்.

இதன் தொடா்ச்சியாக திமுக சாா்பிலும், தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் தனித்தனியே புகாா்கள் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் நூலகத்தில் கடந்த நவம்பா் 10-ஆம் தேதி முதற்கட்ட சோதனையும், நவம்பா் 16-ஆம் தேதி இரண்டாம் கட்ட சோதனையும் மேற்கொண்டனா்.

அப்போது, நூலகத்தில் இருந்த ‘அகல் விளக்கு, பீனிக்ஸ்’ பதிப்பகங்களின் 20 புத்தகங்களைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினா் அவற்றை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பிவைத்துள்ளனா். ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.