இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
சிங்காநல்லூா் ரயில்வே மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோவை மாநகா், பட்டணம் அம்மன் நகா் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்த தம்பதி செந்தில்குமாா், மீனா. இவா்களின் மகன் பிரதாப் குமாா் (28), ஞாயிற்றுக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் சிங்காநல்லூா் - வெள்ளலூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கேரள பதிவெண் கொண்ட காா், பிரதாப் குமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலை, கை, கால்களில் படுகாயமடைந்த பிரதாப் குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக விபத்தை ஏற்படுத்திய திருவள்ளூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் அரவிந்த் (33) மீது கோவை போக்குவரத்துப் புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

